Thursday 14 April 2011

அட மானங்கெட்ட தமிழா !!!!

சித்திரை ஒன்னு..

பள்ளி காலத்தில்.. தமிழ் புத்தாண்டாக கொண்டாடியிருக்கிறேன்..

அவியல், பாயாசம்  என்று வீடே அன்று கமகமக்கும் ..

முறுக்கு, அதிரசம் என்று அம்மா சுட்ட பலகாரங்களை பக்கத்துக்கு வீட்டுக்கு தட்டில்  கொண்டு போய் குடுப்பேன்..

அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்களும் அவர்கள் வீட்டுப் பலகாரங்களை எங்களுக்கு கொண்டு வந்து தருவார்கள்..

வருடத்தில் வரும் எல்லா பண்டிகைகளுக்குமே இது அநேகமாக நடக்கும்.. இனி வரும் காலங்களில் இது நடக்குமா என்று கேட்டால் எனக்கு என்னமோ நடக்காது என்று தான் தோன்றுகிறது.. பிளாட்டை வாங்கிப் போட்டுவிட்டு அதை லாட்ஜ் மாதிரி பயன் படுத்திக் கொண்டிருக்கும், வாழ்கையை வாழாத சாப்ட்வேர் இஞ்ச்நீர்களிடம் இதை எதிர் பார்ப்பதும் முட்டாள் தனம் ..

சரி அவிங்கள திட்ட ஆரம்பிச்சா நாள் பூரா திட்டலாம்.. அதா அப்புறம் பாப்போம் ..

மேட்டர்க்கு வருவோம் ..

அப்புறம் இந்த கேபிள் டிவி வந்த பிறகு எல்லா பண்டிகைகளுக்கும் சிறப்பு மங்கள இசை , சிறப்பு வணக்கம் தமிழகம் ,  சிறப்பு நகைச்சுவை பட்டி  மன்றம் ,  அந்த நடிகையோட சிறப்பு பேட்டி, இந்த பண்டிகைக்கு வெளியாகும் படங்களின் ஒரு சிறப்பு பார்வை, அப்புறம் "இந்திய தொலைகாட்சிகளின் வரலாற்றிலயே முதல் முறையாக"னு எதாவது படம்.. இப்படி டிவி முண்ணாடி உட்காந்தே நாள் போய்டும்..

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வரலாற்றை படிக்கப் படிக்கத் தான் .. இந்த சித்திரை ஒன்னுன்றது நம்ம புத்தாண்டே இல்லன்னு தெரிஞ்சுச்சு..

விவசாயத்தை ஆதாரமாக கொண்டு வாழ்ந்த தமிழர்கள் தை ஒன்றைத் தான் பண்டை காலம் தொட்டே தமிழ் வருடப்ப் பிரபாக கொண்டாடி வந்திருகின்றனர் ..

வள்ளுவர்  கூட தொழில்களில் உழவை தான் முதன்மைத் தொழிலாக கொண்டார்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்


என்று அவர் கூறியதை மறக்கலாகாது ..

இப்படி உழவுத் தொழிலை மையமாக கொண்டு வாழ்ந்த தமிழன் என்று இந்த சித்திரை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தான்??

சரி அதற்க்கு முன் இந்த சித்திரை ஒன்றை மையமாக கொண்ட அறுபது ஆண்டு கணக்கின் வரலாற்றுப் பின்னணி தான் என்ன??

வரலாறாவது மண்ணாவது .. ஆரியன் என்னைகையா வரலாற பத்தி கவலை பட்டுருக்கான் .. அவன் என்னைக்குமே புராணப் புரட்டயல்லவா நம்பி இருக்கிறான்.. கதை இதோ..

எந்நேரமும் மேலோகத்தில் குழப்பத்தை விழைவித்து எல்லாம் நன்மைக்கே என்று அந்தர் பல்டி அடிக்கும் நாரதர்க்கு அன்று ஒரு வினோத ஆசை .. இப்படி பெருமாள் மீது இத்தனை அன்பு வைத்திருக்கிறோமே .. அவர் நாமத்தையே என்றும் ஜெபித்துக் கொண்டிருக்கிறோமே .. அவருடன் கலவி செய்தால்  எப்படி இருக்கும் என்று ..

தயக்கம் ஏன்!! உடனே சென்றார் பெருமாளிடம் ..

தன் ஆசையையும் கூறினார் .. கலவிக்கு என்றுமே பச்சைக் கொடி காட்டும் இந்து தெய்வங்கள் எதை எண்ணித் தான் தயங்கினார்கள் ..

உடனே பெருமாளும் இசைந்தார் .. நாரதர் பெண் வடிவம் கொண்டார்.. இருவரும் கூடினர்..

அவர்கள் கூடி பெற்றக் குழந்தைகள் அறுபது பேர்.. பிரபவ தொடங்கி அட்ச்சய வரை.. அதில் ஒரு பெயர் கூட தமிழ் பெயர் கிடையாது என்பதை காண்க !!!

இந்த அறுபது பெயர்களும் அறுபது ஆண்டுகளின் பெயர்களாக ஆகின.. இந்த அறுபது ஆண்டுகளும் சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கும்..
ஆரியர் எப்படி நான்கு யுகங்களும் சுழற்சி முறையில் வருமோ அதே போல் அறுபது ஆண்டுகளும் சுழற்சி முறையில் வரும் என்று கூறினார்கள் என்பதை மனதில் கொள்க!!! இப்படி சுழற்சி முறையில் ஆண்டுகளை குறிக்க உள்ள நோக்கம் தான் என்ன என்று சில எண்ணலாம்..

"Time As A Metaphor Of History " என்ற தலைப்பில் ரொமிலா  தப்பார் என்ற சரித்திர ஆய்வாளர் ஆற்றிய உரையில் இந்த சுழற்சி யுக முறை என்ன  சமூதாயத்தில்  பாதிப்பை கொண்டு வந்தது என்று தெளிவாக கூறுகிறார்..

 சுழற்சி யுக முறையை கொண்டுள்ள காரணத்தால் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத மனநிலை மக்களிடத்தில் தோன்றுகிறது.. சத்ய யுகத்தில் ஆரம்பித்து உலகில் சத்யம் குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் முற்றிலுமாக அழிந்தது கல்கி என்ற அவதாரம் தோன்றி அநீதியை அழித்த பிறகு சத்ய யுகம் மறுபடியும் தோன்றும்.. இது தான் ஆரியர்  கட்டி விடும் கதை..

 எடுத்துக் காட்டாக கலியுகத்தில் உள்ள ஒருவனிடம் இந்த அநீதியை எதிர்த்து  ஏதாவது செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான்? கலியுகத்தில் இப்படி தான் இருக்கும்.. இறைவன் வந்து தான் எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும் என்று கூறுவான் .. மேலும் சத்ய யுகம் பிறந்தாலும் மீண்டும் கலியுகதிக்கு தான் கொண்டு வந்து விடும் பல ஆண்டுகள் கழித்து.. இது மூலம் முன்னேற்றம்  என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போகிறது .. மக்களும் எந்த ஒரு மாற்றத்திற்காகவும் பாடு படாமல் எல்லாம் தன்னால் நடக்கும் என்ற மனநிலைக்குத்  தள்ளப் படுகிறார்கள்..

இதனால் யாருக்கு லாபம்? ஆர்யத்தின் சூத்திரதாரியான பார்பனுக்கு தான்!!!.. உழைக்காமல் உண்ணும் அவனை எவனும் கேள்வி கேட்கப் போவதில்லையே மாற்றத்தின்  மீது நம்பிக்கை வைக்காத மக்கள்..

எவ்வளவு பெரிய ஆரிய சூழ்ச்சி!!!

இந்த கேவலமான புராணக்  கதையையும்  (புராணக் கதையில் எந்தக் கதை கேவலமாக இல்லை? என்று நீங்க கேக்கலாம் .. அதுவும் சரிதான் .. ) அந்த ஆண்டு முறையையும் தமிழர்கள் மத்தியில் புகுத்தியது ஆரியம்.. சாலிவாகனன்  என்ற அரசனால் தான் கி.பிக்களில் புகுத்தப் பட்டது என்று வரலாறு கூறுகிறது ..

இந்தக் அசிங்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்று பெரியார் , மறைமலை அடிகளார் போன்றோர் முயற்சி எடுத்தனர் ..

திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவதே தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழி வகுக்கும்.. தை ஒன்றை தமிழர் புத்தாண்டாக சுய மரியாதையுடன் கொண்டாடுவோம்..



 கலைஞர் தமிழ்ப் புத்தாண்டு தை ஒன்று தான் என்று அறிவித்தப் பிறகும் .. "கலைஞர் சொன்னா.. மாறிடுமா.. நான் சித்திரை ஒன்னை தான் கொண்டாடுவேன்" என்று பிடிவாதம் பிடிகின்றனர் தமிழர்களில் சிலர் ; கலைஞர் மேல் உள்ள கோவம் உண்மையை புறம் தள்ளுகிறது..

அம்மையார் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாராம்   .. அவர் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றக் கூடும் .. அனால் உண்மையை அறிந்து பகுத்தறிவுடன் செயல் படுங்கள் தோழர்களே..

உண்மையை கூறி தோழர்களை தெளிவு பெறச்செயுங்கள்!!!
தமிழர் புத்தாண்டு தை ஒன்றே என்று உரக்கச் சொல்லுவோம்  ..!!
ஆரிய மாயையிலிருந்து விடு படுவோம் !!!




1 comment:

Anonymous said...

என்ன செய்வது ? தமிழன் என்பவன் எப்பொழுதும் ஆரிய அடிமையாக இருக்கத் தான் விரும்புகிறான்.