Tuesday, 24 May 2011

நிராயுதபாணி ஆகும் தமிழன்

தமிழினத்தின் மீட்சி 

ஒருவன் நம்மை தாக்க வரும் போது அவனிடம் இருந்து பாதுகாக்க நம் கையில் ஒரு ஆயுதம் இருக்க வேண்டும்....

ஒரு இனம் இன்னொரு இனத்தை அளிக்க வேண்டும் என்றாலும் போர் தொடுத்து இன அழிப்பை மேற் கொள்ளலாம்.. அதை எதிர்க்க  மனதில் திடமும் போராடும் குணமும்  கையில் ஆயுதமும் வேண்டும்..

அனால் ஒரு இனம் மற்றொரு இனத்தை அடிமை படுத்த வேண்டும், தங்களை அண்டிப் பிழைக்க வைக்க  வேண்டும் என்றால் போருக்குப் பொய் உயிரிழப்பைச் சந்திக்கத் தேவை இல்லை..   அவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை அழித்து விட்டால் போதும்..

அரியர் திராவிடரை அடிமையாக்க கையாண்ட முறையும் இதுவே .. தமிழரின் தேன்மொழியான தமிழை நீச மொழி, சமஸ்க்ரிதத்தில் இருந்து தோன்றிய மொழி என்று தூற்றினான் .. நடுகல் வைத்து வீரர்களை வணங்கி வந்த தமிழனை வேதத்தை நம்ப வைத்தனர் .. 

அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே

என்று பார்பனர்களை பார்த்து நகைத்த நம்மை "நீ தேவடியாள் மகன்" என்று அவன் சொல்லக் கேட்டும் எதிர்ப்பின்றி தலை குனிந்து முதுகு கோணி நடந்து சென்றோம்..

இதை எல்லாம் பார்த்து, தமிழர்களை அடிமை விலங்கில் இருந்து விடுவிக்க வந்த விடிவெள்ளி தான் தந்தை பெரியார்.. 


பார்பனர் அல்லாதார் என்று எதிர் மறையில் நம்மக்கு ஏனடா பெயர் என்று நமக்கான வரலாற்று குறியீடான திராவிடர்  என்று அவர் சூட்டிய  பெயர் தான் நமக்கு உரிமை தரும் முழக்கமாக மாறியது..

 "சூத்திரன் படித்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் வாயாலேயே உணவை உண்டு வாயாலேயே மலம் கழிக்கும் கொடிய மிருகமாக பிறப்பான்" என்று நம்மை பள்ளிக்கூடம் பக்கமே போக விடாமல் இருந்த மனு தர்ம விலங்கில் இருந்து விடுவித்ததும் திராவிடமே .. 


பள்ளிகூடங்களை நடத்த வசதி இல்லை.. பாதி நேரம் படித்து மீதி நேரம் குலத் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும்  என்ற சனாதன தர்மம் ஒளிந்து கொண்டு சிரித்த போதும் சாடையால் அடித்துத் துரத்தியதும் திராவிடமே...

"கல்லூரிகளில் நுழைவுக்கு சமஸ்க்ரிதம் தெரிந்திருக்க வேண்டும் " என்று தேவ பாஷையை வைத்து கல்லூரி கதவுகளை பூட்டிய வைதீக விற்பனர்களை வெருட்டியதும்   திராவிடமே ..
 
மன்னர் ஆட்சி மாறி மக்கள்ஆட்சி வந்த பிறகும் ஹிந்தியை நாம் மீது திணித்து நம் மீது கலாச்சார படையெடுப்பு நடத்திய ஆரியர்களிடம் இருந்து நம்மை காபற்றியதும் திராவிடமே..

நேற்றும் இன்றும் என்றும் நமக்கு அரண் திராவிடமே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. 

துரோகியின் பொய் சாட்சி 

சூத்திரன் காந்தியை கொன்ற பிராமண ஆர்.எஸ். எஸ் அமைப்பு வெறும் ஒரு வருட காலத்திற்கு தான் தடை செய்யப் பட்டது.. அனால் நம் தமிழ் உறவுகளை படைகளை ஏவிக் கொன்ற "ஊழல் பேர்வழி" ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு புலிகள் இயக்கத்தை அழித்து அம் மக்களையும் கொன்று குவித்து ராஜபக்சேவின் கரம் பற்றி வருணாசிரம அரவம் நெளிந்து கொண்டு இருக்கிறது இன்றும்..

ஈழத்து தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் புலிகளை அளித்தால் மட்டும் போதாது..  தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களிடையே அந்த கிளர்ச்சி பரவாமல் இருக்க வேண்டும் என்பதில் ராஜபக்சேவும் அவர் நம்பும் இந்திய அரசும் மிகுந்த கவனம் செலுத்தியது என்பதை விகிலீக்ஸ் வெளியிட்டது.. அதற்க்கு முன்னால் முதல்வர் கருணாநிதியும் உறுதுணையாக இருந்தார் என்று கூறியது..


இந்த சூழ் நிலையில் தான் சிங்களவர்களுக்கு கைக் கூலியாகியிருக்கும் கே.பி பத்மநாபனை இந்தியத் தொலைக் காட்சியான சி.என்.என் ஐ.பி.என் பேட்டிக் கண்டுள்ளது..

இலங்கையால் கைது செய்யப் பட்டிருக்கும் ஒரு கைதியை எப்படி இந்தியத் தொலைக் காட்சி பேட்டி கண்டது என்பதே ஒரு புதிராக இருக்கிறது!! இதுவே எல்லா சந்தேகங்களுக்கும் அடிப்படையாகவும் இருக்கிறது.. 

முதலில் அந்த பேட்டியின் ஒரு பகுதியை கீழே பாருங்கள்..

பேட்டிக் கண்டுள்ளது என்று கூற வேண்டுமா.. அல்லது ஒரு நாடத்தை  ஒளிப் பதிவு செய்தது என்று கூற வேண்டுமா என்று அந்த காணொளியைப்  பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.. 

இனி "இலங்கைத்" தமிழர்கள் போராடி எல்லாம் ஒன்றும் பெற முடிது என்றும்.. அமைசியான முறையில் பேச்சு வார்த்தையின் முறையில் தான் எதாவது வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என்று பத்மநாபன் பேட்டியின் முதல் பகுதியில் கூறினார்.. மேலும் பிரபாகரனுக்கு ஈழத்தை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது.. மக்களைப் பற்றி அவர் கவலைப் படதே இல்லை என்றும் கூறினார்.. 

தமிழ் நாடு அரசியல்வாதிகள் புலிகளைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை என்றும்.. தேவை இல்லமால் அவர்கள் பேசி பிரச்சனை இன்னும் உருவாக்குகிறார்கள் என்றும் கூறுகிறார் கே.பி.

மேலும் வைகோ தமிழ் நாடு அரசியலில் முன்னணி நிலைமைக்கு வருவதற்காக மட்டுமே புலிகளை ஆதரித்ததாகவும் அவர் ஒரு சுய நலவாதி என்றும் கூறுகிறார்.. 

தி.மு.க விற்கும் புலிகளுக்கும் என்ன உறவு என்று பேட்டி காண்பவர் துருவி துருவிக் கேட்கிறார்.. 

இலங்கைத் தமிழர்களை துழியும் ஆதரிக்காத ஜெயலலிதாவை " she is a very smart women.. she knows the pulse of the people." என்று புகழாரம் சூடுகிறார்.. புலிகள் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படவும் தயங்கி இருக்க மாட்டார்கள் என்றும் புன் முறுவலுடன் கூறுகிறார்...

எல்லாவற்றையும் மிஞ்சும் பொய் ஒன்றை கூறுகிறார்.. புலிகள் வெளி நாட்டில் வாழும் ஈழ ஆதரவாளர்களுக்கு வருடத்திற்கு 300,000 - 400,000 $ பணத்தை "சம்பளமாக" வழங்கி வந்ததாக.. போதையில் உலருபவன் கூட இப்படி பிதற்ற மாட்டான்..

இவர் ஒரு தமிழின துரோகி.. புலிகளாலேயே நிராகரிக்கப் பட்டவர்.. ஏதோ உளறிக் கொண்டிருக்கட்டும் என்று விட்டு விடுவது பெரும் முட்டாள் தனம்.. இவர் கூறியதில் வருங்காலத் தமிழகம் சந்திக்கப் போகும் அரசியல் சூழ்ச்சி பொதிந்துள்ளது..


ராஜீவ் காந்தி கொலைக்கு தான் மனிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்பது மட்டுமல்லாமல்  எங்களை வாழ விடுங்கள் என்று கெஞ்சுகிறார் கே.பி. போராடி உரிமை பெற உயிர் நீத்த மறவர் கூடத்தில் அண்டிப் பிழைக்கும் குள்ள நரி அதற்குப் பிறகு கூறியது தான் நாம் சந்திக்கப் போகும் ஆபத்திற்கு 
அடித்தளம்..

கேள்வியை தொடரும் செய்தியாளர் "நடந்ததை மறக்க வேண்டும் என்றால் நடந்ததில் உள்ள உண்மைகளை வெளிப்படையாக  கூற வேண்டும் .. தமிழ் நாட்டில் எந்தெந்த தலைவர்கள் தமிழர்களை வன்முறைக்குத் தூண்டினர் என்று உங்களால் வெளிபடையாக கூற முடியுமா! என்று கேட்கிறார்..

பெரியாரின் கொள்கைகள்  தான் ராஜீவ்காந்திக் கொலையாக உருவெடுத்தது என்று எந்த ஒரு அடிப்படையும்  இல்லாமல் ஒரு புரட்டிக் கட்டவிழ்த்து விடுகிறார்.  பார்ப்பனியத்திற்கு  எதிரான போராட்டம் பிரபாகரனின் மனதில் ஆழமாக பதிந்ததாகவும் அதுவே ராஜீவ் காந்திக் கொல்லைக்கு அவரை உந்தியதாகவும் அவர் கூறுகிறார்.. பிரபாகரனை தமிழக ஊடகங்கள் ஒரு தலைவனாக பாவிக்கின்றன என்று முடிக்கிறார்..


தொடரும் ஊடவியலாளர் "தி.மு.க வும் அதன் கொள்கையும்  தான் பிரபாகரனை கருத்து ரீதியாக உர்வாகியதா என்று கேட்க்கிறார்"


ஆம் என்று கே.பி பதிலளிப்பதாக முடிகிறது காணொளி..

சுற்றி வளைக்கும் சூழ்ச்சி


இதன் விளைவு தான் என்ன?

சமூக நீதிக்கான போராடிய இயக்கத்தை பற்றி வெகு ஜனங்களின் மத்தியில் ஒரு பொய்யான கருத்தை விதைக்க காரணம் என்ன?
ஈழப் பிரச்சனையை திசை திருப்பும் ஒரு சின்ன முயற்சியா இது.?
இல்லை!! நிச்சயமாக இல்லை!!


சுட்டுக் கொள்ளப் படும் மீனவர்களை கள்ளத் தோணியில் செல்பவர்கள் என்றும், ஈழத்திற்கு ஆதவராக பேசினால் தேசியப் பாதுகாப்புச் தடைச் சட்டம் என்றும் , தமிழர்களுக்காக போராடும் தோழமை இயக்கங்களை கொச்சைப் படுத்தியும்  தமிழர்களை சுற்றிப் பின்னப் படும் ஒரு பெரும் சூழ்ச்சி வலையின் ஒரு முடிச்சு இந்த பேட்டி..

இன்றும் தமிழன் வட நாட்டிருகுச் சென்றால் "நீங்கள் என் ஹிந்தி படிக்கக் கூடாது.. தமிழர்கள் மட்டும் என் இப்படி இருக்கிறீர்கள்.. அது நமது தேசிய மொழி தானே?" என்று கேட்கும் படித்த வடவர்களை எங்கும் காணலாம்.. "இந்தியாவிற்கும் தேசிய மொழி என்று ஒன்று இல்லை.. என் தேசிய மொழி தாய் மொழி எல்லாம் தமிழ் தான்" என்றால் முகம் சுருக்கி அந்த இடத்தை விட்டு விலகி நாம் போன பினால் அவர்தூறு பேசுவார்கள்.. தமிழர்கள் மீது அப்படி ஒரு காழ்ப்புணர்வு வடக்கே இருபது மறுக்க முடியாத உண்மை..


சிந்தித்துப் பார்த்தல் தமிழன் தன்னை சூதிரனாக , ஹிந்தி மொழியை ஏற்று இரண்டறக் கலந்திடத் தடுத்து தமிழனை தமிழனாய் தலை நிமிர வைப்பது திராவிடம் இன்று வேறு இல்லை..இந்த திராவிடம் மட்டும் அழிந்தால் தமிழன் மறுபடியும் "தேவிடியாள் மகனாக " தங்கு தடையின்றி அழைக்கப்  படலாம்.. 


நாம் மனிதராய் வாழ வழி செய்யும் கொள்கையை தீவிரவாதமாக பாவித்தால் நாம் கொள்கையற்றவர்களாக ஆரியருக்கு அடிமையாக மாறுவதற்கு வெகு காலம் ஆகாது..

தமிழ் நாட்டின் இன்றைய காட்சி 
இதை எதிர்த்து கண்டித்து போராட வேண்டிய தமிழரின், தமிழ் நாட்டின் நிலைமை என்ன..?? 

முக்கியக் கட்சியான தி.மு.க விற்கு எதிராக தான் இந்த குற்றச் சாட்டே வைக்கப் படுகிறது.. 


ஏற்கனவே தேர்தலில் பலத்த அடி வாங்கி இருக்கும் தி.மு.க மீள்வதற்கும் அதன் மேல் இப்படி ஒரு பழியை போட்டு தி.மு.க வை முற்றிலும் ஒழிக்க இதை ஒரு அறிய சந்தர்ப்பமாக தமிழ் நாட்டிற்க்குள் வரத் துடிக்கும் தேசியக் கட்சிகள் பயன் படுத்திக் கொள்ளும்.. இதைக் கண்டித்து கலைஞர் அறிக்கை வெளியிட்டாலும் அதன் தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று சிந்தித்தால் வேதனை அள்ளிக்கக் கூடியதாக தான் இருக்கிறது..

கருணாநிதியை ஒழித்துக் கட்டுவதே தன் வாழ் நாள் சாதனையாக கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு இது அமிர்தம்.. 


கண்டிப்பாக இதை பெரிய அளவில் மேடைகள் தோரும் பேசுவார். இது சமந்தமாக மதிய அரசிற்கும் குடியரசுத் தலைவருக்கும் கூட கடிதம் எழுத அவர் தயங்க மாட்டார்.. தி.மு.க மற்றும் திராவிட இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரினாலும் அதைக் கண்டு வியப்பில்லை.. அதிலிருந்து தப்பிபதர்க்காக தன கட்சிப் பெயரை மாற்றுவதர்க்குக் கூட அவர் தயங்க மாட்டார் என்பது எள்ளளவு அரசியல் தெரிந்தோரும் உணருவர்..

இன்று தமிழகத்தில் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வரும் தமிழ்தேசியக் கட்சிகளின்  நிலைப்பாடு என்ன ஈழத் தமிழருக்கு அநீதியா  "திராவிடத்தால் வீழ்ந்தோம் "..
மீனவர் பிரச்சனையா "திராவிடத்தால் வீழ்ந்தோம்"..

தண்ணீர் பிரச்சனையா "திராவிடத்தால் வீழ்ந்தோம்"..

பிற மாநிலங்களில் தமிழன் தாக்கப் பட்டானா  "திராவிடத்தால் வீழ்ந்தோம்"..

உரிமை கொடுத்த திராவிடம் இன்று நம்மை உயிரை குடிக்கும் திராவிடமாக சித்தரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் இதற்க்கு மௌனம் காத்தால் அது ஆச்சரியப் படுவதற்க்கில்லை.. 

சித்தரிப்புகளை கண்டு பாராட்ட இது சரித்திரப் புனை கதை அல்ல.. 

சரித்திரப் புரட்டு.. 

அடியோடு அகற்றப் பட வேண்டிய..

அரும்பிலயே கிள்ளி  எறியப் பட வேண்டிய விஷ விதை..

தமிழ் நாட்டில் ஒவ்வொரு தலைவரின் தாய் வழி தந்தை வழி சொந்தங்களையும் பரிசீலித்து  இரத்தப் பரிசோதனை செய்து யார் தமிழர் என்று முடிவு சொல்பவர் அறிஞராக திகழ்கிறார்.. அவர் எழுதிய புத்தகமோ நாம் தமிழர் கட்சிக் கூடம் நடக்கும் இடங்களில் எல்லாம் விற்கப் படுகிறது ..

இன்னலை அழித்தொழிக்க அநியாயத்தை வேறோடருக்க வந்தேன் என்று முழங்கிய "நாம் தமிழர்" கட்சி மேடை தோறும் மறக்காமல் கூறும்  வாசகம் "திராவிடத்தால் வீழ்ந்தோம்"

"தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழலாம்.. ஆனால் நாங்கள் தான் ஆள  வேண்டும் " என்பது தான் தமிழர்களுக்கான சமூக நீதி என்று "கன்னடர்" பெரியாரின் பேரன் "ஜேர்மன்" மார்க்சின்  மாணவன் சீமான் உறுமி கைத்தட்டை சம்பாதிக்கிறார்..
இந்திய அரசின் கீழ் தனைகளை தனி ஒரு கலாசாரக் குழுவாக அடையாளப் படுத்திக் கொள்கின்ற தமிழர்க்கு அரணான திராவிடத்தை ஒழிக்க நினைக்கும் ஹிந்துத்வாக்களுக்கும் , தமிழ் நாடு அரசியலில் ஒரு முக்கிய இடத்தை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்று என்னும் கோங்க்றேச்சிருக்கும் சீமான் மறை முகமாக தனக்கு  தெரியாமலேயே உதவி செய்து கொண்டிருக்கிறார்!!!
இப்போது தான் 29  இடங்களை வென்றிருக்கிறோம்.. நமக்கும் திராவிடக் கொள்கைக்கும் துள்ளியும் சமந்தமில்லை. இதில் என் வீணாக மூக்கை நுளைப்பானே என்று விஜயகாந்த் இதை பற்றி கேள்விப் படாததுப் போல் நடந்து கொள்வார்..

திராவிடம் வீழும் தினம் தமிழனும் வீழ்வான் ..

மறுபடியும் அடிமையாவான்..

உரிமை இழப்பான்..

நுகர்வுக்க் கலாச்சாரத்தில் நசுங்கிச் சாவான்..  

No comments: