Tuesday, 24 May 2011

நிராயுதபாணி ஆகும் தமிழன்

தமிழினத்தின் மீட்சி 

ஒருவன் நம்மை தாக்க வரும் போது அவனிடம் இருந்து பாதுகாக்க நம் கையில் ஒரு ஆயுதம் இருக்க வேண்டும்....

ஒரு இனம் இன்னொரு இனத்தை அளிக்க வேண்டும் என்றாலும் போர் தொடுத்து இன அழிப்பை மேற் கொள்ளலாம்.. அதை எதிர்க்க  மனதில் திடமும் போராடும் குணமும்  கையில் ஆயுதமும் வேண்டும்..

அனால் ஒரு இனம் மற்றொரு இனத்தை அடிமை படுத்த வேண்டும், தங்களை அண்டிப் பிழைக்க வைக்க  வேண்டும் என்றால் போருக்குப் பொய் உயிரிழப்பைச் சந்திக்கத் தேவை இல்லை..   அவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை அழித்து விட்டால் போதும்..

அரியர் திராவிடரை அடிமையாக்க கையாண்ட முறையும் இதுவே .. தமிழரின் தேன்மொழியான தமிழை நீச மொழி, சமஸ்க்ரிதத்தில் இருந்து தோன்றிய மொழி என்று தூற்றினான் .. நடுகல் வைத்து வீரர்களை வணங்கி வந்த தமிழனை வேதத்தை நம்ப வைத்தனர் .. 

அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே

என்று பார்பனர்களை பார்த்து நகைத்த நம்மை "நீ தேவடியாள் மகன்" என்று அவன் சொல்லக் கேட்டும் எதிர்ப்பின்றி தலை குனிந்து முதுகு கோணி நடந்து சென்றோம்..

இதை எல்லாம் பார்த்து, தமிழர்களை அடிமை விலங்கில் இருந்து விடுவிக்க வந்த விடிவெள்ளி தான் தந்தை பெரியார்.. 


பார்பனர் அல்லாதார் என்று எதிர் மறையில் நம்மக்கு ஏனடா பெயர் என்று நமக்கான வரலாற்று குறியீடான திராவிடர்  என்று அவர் சூட்டிய  பெயர் தான் நமக்கு உரிமை தரும் முழக்கமாக மாறியது..

 "சூத்திரன் படித்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் வாயாலேயே உணவை உண்டு வாயாலேயே மலம் கழிக்கும் கொடிய மிருகமாக பிறப்பான்" என்று நம்மை பள்ளிக்கூடம் பக்கமே போக விடாமல் இருந்த மனு தர்ம விலங்கில் இருந்து விடுவித்ததும் திராவிடமே .. 


பள்ளிகூடங்களை நடத்த வசதி இல்லை.. பாதி நேரம் படித்து மீதி நேரம் குலத் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும்  என்ற சனாதன தர்மம் ஒளிந்து கொண்டு சிரித்த போதும் சாடையால் அடித்துத் துரத்தியதும் திராவிடமே...

"கல்லூரிகளில் நுழைவுக்கு சமஸ்க்ரிதம் தெரிந்திருக்க வேண்டும் " என்று தேவ பாஷையை வைத்து கல்லூரி கதவுகளை பூட்டிய வைதீக விற்பனர்களை வெருட்டியதும்   திராவிடமே ..
 
மன்னர் ஆட்சி மாறி மக்கள்ஆட்சி வந்த பிறகும் ஹிந்தியை நாம் மீது திணித்து நம் மீது கலாச்சார படையெடுப்பு நடத்திய ஆரியர்களிடம் இருந்து நம்மை காபற்றியதும் திராவிடமே..

நேற்றும் இன்றும் என்றும் நமக்கு அரண் திராவிடமே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. 

துரோகியின் பொய் சாட்சி 

சூத்திரன் காந்தியை கொன்ற பிராமண ஆர்.எஸ். எஸ் அமைப்பு வெறும் ஒரு வருட காலத்திற்கு தான் தடை செய்யப் பட்டது.. அனால் நம் தமிழ் உறவுகளை படைகளை ஏவிக் கொன்ற "ஊழல் பேர்வழி" ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு புலிகள் இயக்கத்தை அழித்து அம் மக்களையும் கொன்று குவித்து ராஜபக்சேவின் கரம் பற்றி வருணாசிரம அரவம் நெளிந்து கொண்டு இருக்கிறது இன்றும்..

ஈழத்து தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் புலிகளை அளித்தால் மட்டும் போதாது..  தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களிடையே அந்த கிளர்ச்சி பரவாமல் இருக்க வேண்டும் என்பதில் ராஜபக்சேவும் அவர் நம்பும் இந்திய அரசும் மிகுந்த கவனம் செலுத்தியது என்பதை விகிலீக்ஸ் வெளியிட்டது.. அதற்க்கு முன்னால் முதல்வர் கருணாநிதியும் உறுதுணையாக இருந்தார் என்று கூறியது..


இந்த சூழ் நிலையில் தான் சிங்களவர்களுக்கு கைக் கூலியாகியிருக்கும் கே.பி பத்மநாபனை இந்தியத் தொலைக் காட்சியான சி.என்.என் ஐ.பி.என் பேட்டிக் கண்டுள்ளது..

இலங்கையால் கைது செய்யப் பட்டிருக்கும் ஒரு கைதியை எப்படி இந்தியத் தொலைக் காட்சி பேட்டி கண்டது என்பதே ஒரு புதிராக இருக்கிறது!! இதுவே எல்லா சந்தேகங்களுக்கும் அடிப்படையாகவும் இருக்கிறது.. 

முதலில் அந்த பேட்டியின் ஒரு பகுதியை கீழே பாருங்கள்..

பேட்டிக் கண்டுள்ளது என்று கூற வேண்டுமா.. அல்லது ஒரு நாடத்தை  ஒளிப் பதிவு செய்தது என்று கூற வேண்டுமா என்று அந்த காணொளியைப்  பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.. 

இனி "இலங்கைத்" தமிழர்கள் போராடி எல்லாம் ஒன்றும் பெற முடிது என்றும்.. அமைசியான முறையில் பேச்சு வார்த்தையின் முறையில் தான் எதாவது வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என்று பத்மநாபன் பேட்டியின் முதல் பகுதியில் கூறினார்.. மேலும் பிரபாகரனுக்கு ஈழத்தை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது.. மக்களைப் பற்றி அவர் கவலைப் படதே இல்லை என்றும் கூறினார்.. 

தமிழ் நாடு அரசியல்வாதிகள் புலிகளைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை என்றும்.. தேவை இல்லமால் அவர்கள் பேசி பிரச்சனை இன்னும் உருவாக்குகிறார்கள் என்றும் கூறுகிறார் கே.பி.

மேலும் வைகோ தமிழ் நாடு அரசியலில் முன்னணி நிலைமைக்கு வருவதற்காக மட்டுமே புலிகளை ஆதரித்ததாகவும் அவர் ஒரு சுய நலவாதி என்றும் கூறுகிறார்.. 

தி.மு.க விற்கும் புலிகளுக்கும் என்ன உறவு என்று பேட்டி காண்பவர் துருவி துருவிக் கேட்கிறார்.. 

இலங்கைத் தமிழர்களை துழியும் ஆதரிக்காத ஜெயலலிதாவை " she is a very smart women.. she knows the pulse of the people." என்று புகழாரம் சூடுகிறார்.. புலிகள் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படவும் தயங்கி இருக்க மாட்டார்கள் என்றும் புன் முறுவலுடன் கூறுகிறார்...

எல்லாவற்றையும் மிஞ்சும் பொய் ஒன்றை கூறுகிறார்.. புலிகள் வெளி நாட்டில் வாழும் ஈழ ஆதரவாளர்களுக்கு வருடத்திற்கு 300,000 - 400,000 $ பணத்தை "சம்பளமாக" வழங்கி வந்ததாக.. போதையில் உலருபவன் கூட இப்படி பிதற்ற மாட்டான்..

இவர் ஒரு தமிழின துரோகி.. புலிகளாலேயே நிராகரிக்கப் பட்டவர்.. ஏதோ உளறிக் கொண்டிருக்கட்டும் என்று விட்டு விடுவது பெரும் முட்டாள் தனம்.. இவர் கூறியதில் வருங்காலத் தமிழகம் சந்திக்கப் போகும் அரசியல் சூழ்ச்சி பொதிந்துள்ளது..


ராஜீவ் காந்தி கொலைக்கு தான் மனிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்பது மட்டுமல்லாமல்  எங்களை வாழ விடுங்கள் என்று கெஞ்சுகிறார் கே.பி. போராடி உரிமை பெற உயிர் நீத்த மறவர் கூடத்தில் அண்டிப் பிழைக்கும் குள்ள நரி அதற்குப் பிறகு கூறியது தான் நாம் சந்திக்கப் போகும் ஆபத்திற்கு 
அடித்தளம்..

கேள்வியை தொடரும் செய்தியாளர் "நடந்ததை மறக்க வேண்டும் என்றால் நடந்ததில் உள்ள உண்மைகளை வெளிப்படையாக  கூற வேண்டும் .. தமிழ் நாட்டில் எந்தெந்த தலைவர்கள் தமிழர்களை வன்முறைக்குத் தூண்டினர் என்று உங்களால் வெளிபடையாக கூற முடியுமா! என்று கேட்கிறார்..

பெரியாரின் கொள்கைகள்  தான் ராஜீவ்காந்திக் கொலையாக உருவெடுத்தது என்று எந்த ஒரு அடிப்படையும்  இல்லாமல் ஒரு புரட்டிக் கட்டவிழ்த்து விடுகிறார்.  பார்ப்பனியத்திற்கு  எதிரான போராட்டம் பிரபாகரனின் மனதில் ஆழமாக பதிந்ததாகவும் அதுவே ராஜீவ் காந்திக் கொல்லைக்கு அவரை உந்தியதாகவும் அவர் கூறுகிறார்.. பிரபாகரனை தமிழக ஊடகங்கள் ஒரு தலைவனாக பாவிக்கின்றன என்று முடிக்கிறார்..


தொடரும் ஊடவியலாளர் "தி.மு.க வும் அதன் கொள்கையும்  தான் பிரபாகரனை கருத்து ரீதியாக உர்வாகியதா என்று கேட்க்கிறார்"


ஆம் என்று கே.பி பதிலளிப்பதாக முடிகிறது காணொளி..

சுற்றி வளைக்கும் சூழ்ச்சி


இதன் விளைவு தான் என்ன?

சமூக நீதிக்கான போராடிய இயக்கத்தை பற்றி வெகு ஜனங்களின் மத்தியில் ஒரு பொய்யான கருத்தை விதைக்க காரணம் என்ன?
ஈழப் பிரச்சனையை திசை திருப்பும் ஒரு சின்ன முயற்சியா இது.?
இல்லை!! நிச்சயமாக இல்லை!!


சுட்டுக் கொள்ளப் படும் மீனவர்களை கள்ளத் தோணியில் செல்பவர்கள் என்றும், ஈழத்திற்கு ஆதவராக பேசினால் தேசியப் பாதுகாப்புச் தடைச் சட்டம் என்றும் , தமிழர்களுக்காக போராடும் தோழமை இயக்கங்களை கொச்சைப் படுத்தியும்  தமிழர்களை சுற்றிப் பின்னப் படும் ஒரு பெரும் சூழ்ச்சி வலையின் ஒரு முடிச்சு இந்த பேட்டி..

இன்றும் தமிழன் வட நாட்டிருகுச் சென்றால் "நீங்கள் என் ஹிந்தி படிக்கக் கூடாது.. தமிழர்கள் மட்டும் என் இப்படி இருக்கிறீர்கள்.. அது நமது தேசிய மொழி தானே?" என்று கேட்கும் படித்த வடவர்களை எங்கும் காணலாம்.. "இந்தியாவிற்கும் தேசிய மொழி என்று ஒன்று இல்லை.. என் தேசிய மொழி தாய் மொழி எல்லாம் தமிழ் தான்" என்றால் முகம் சுருக்கி அந்த இடத்தை விட்டு விலகி நாம் போன பினால் அவர்தூறு பேசுவார்கள்.. தமிழர்கள் மீது அப்படி ஒரு காழ்ப்புணர்வு வடக்கே இருபது மறுக்க முடியாத உண்மை..


சிந்தித்துப் பார்த்தல் தமிழன் தன்னை சூதிரனாக , ஹிந்தி மொழியை ஏற்று இரண்டறக் கலந்திடத் தடுத்து தமிழனை தமிழனாய் தலை நிமிர வைப்பது திராவிடம் இன்று வேறு இல்லை..இந்த திராவிடம் மட்டும் அழிந்தால் தமிழன் மறுபடியும் "தேவிடியாள் மகனாக " தங்கு தடையின்றி அழைக்கப்  படலாம்.. 


நாம் மனிதராய் வாழ வழி செய்யும் கொள்கையை தீவிரவாதமாக பாவித்தால் நாம் கொள்கையற்றவர்களாக ஆரியருக்கு அடிமையாக மாறுவதற்கு வெகு காலம் ஆகாது..

தமிழ் நாட்டின் இன்றைய காட்சி 
இதை எதிர்த்து கண்டித்து போராட வேண்டிய தமிழரின், தமிழ் நாட்டின் நிலைமை என்ன..?? 

முக்கியக் கட்சியான தி.மு.க விற்கு எதிராக தான் இந்த குற்றச் சாட்டே வைக்கப் படுகிறது.. 


ஏற்கனவே தேர்தலில் பலத்த அடி வாங்கி இருக்கும் தி.மு.க மீள்வதற்கும் அதன் மேல் இப்படி ஒரு பழியை போட்டு தி.மு.க வை முற்றிலும் ஒழிக்க இதை ஒரு அறிய சந்தர்ப்பமாக தமிழ் நாட்டிற்க்குள் வரத் துடிக்கும் தேசியக் கட்சிகள் பயன் படுத்திக் கொள்ளும்.. இதைக் கண்டித்து கலைஞர் அறிக்கை வெளியிட்டாலும் அதன் தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று சிந்தித்தால் வேதனை அள்ளிக்கக் கூடியதாக தான் இருக்கிறது..

கருணாநிதியை ஒழித்துக் கட்டுவதே தன் வாழ் நாள் சாதனையாக கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு இது அமிர்தம்.. 


கண்டிப்பாக இதை பெரிய அளவில் மேடைகள் தோரும் பேசுவார். இது சமந்தமாக மதிய அரசிற்கும் குடியரசுத் தலைவருக்கும் கூட கடிதம் எழுத அவர் தயங்க மாட்டார்.. தி.மு.க மற்றும் திராவிட இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரினாலும் அதைக் கண்டு வியப்பில்லை.. அதிலிருந்து தப்பிபதர்க்காக தன கட்சிப் பெயரை மாற்றுவதர்க்குக் கூட அவர் தயங்க மாட்டார் என்பது எள்ளளவு அரசியல் தெரிந்தோரும் உணருவர்..

இன்று தமிழகத்தில் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வரும் தமிழ்தேசியக் கட்சிகளின்  நிலைப்பாடு என்ன ஈழத் தமிழருக்கு அநீதியா  "திராவிடத்தால் வீழ்ந்தோம் "..
மீனவர் பிரச்சனையா "திராவிடத்தால் வீழ்ந்தோம்"..

தண்ணீர் பிரச்சனையா "திராவிடத்தால் வீழ்ந்தோம்"..

பிற மாநிலங்களில் தமிழன் தாக்கப் பட்டானா  "திராவிடத்தால் வீழ்ந்தோம்"..

உரிமை கொடுத்த திராவிடம் இன்று நம்மை உயிரை குடிக்கும் திராவிடமாக சித்தரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் இதற்க்கு மௌனம் காத்தால் அது ஆச்சரியப் படுவதற்க்கில்லை.. 

சித்தரிப்புகளை கண்டு பாராட்ட இது சரித்திரப் புனை கதை அல்ல.. 

சரித்திரப் புரட்டு.. 

அடியோடு அகற்றப் பட வேண்டிய..

அரும்பிலயே கிள்ளி  எறியப் பட வேண்டிய விஷ விதை..

தமிழ் நாட்டில் ஒவ்வொரு தலைவரின் தாய் வழி தந்தை வழி சொந்தங்களையும் பரிசீலித்து  இரத்தப் பரிசோதனை செய்து யார் தமிழர் என்று முடிவு சொல்பவர் அறிஞராக திகழ்கிறார்.. அவர் எழுதிய புத்தகமோ நாம் தமிழர் கட்சிக் கூடம் நடக்கும் இடங்களில் எல்லாம் விற்கப் படுகிறது ..

இன்னலை அழித்தொழிக்க அநியாயத்தை வேறோடருக்க வந்தேன் என்று முழங்கிய "நாம் தமிழர்" கட்சி மேடை தோறும் மறக்காமல் கூறும்  வாசகம் "திராவிடத்தால் வீழ்ந்தோம்"

"தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழலாம்.. ஆனால் நாங்கள் தான் ஆள  வேண்டும் " என்பது தான் தமிழர்களுக்கான சமூக நீதி என்று "கன்னடர்" பெரியாரின் பேரன் "ஜேர்மன்" மார்க்சின்  மாணவன் சீமான் உறுமி கைத்தட்டை சம்பாதிக்கிறார்..
இந்திய அரசின் கீழ் தனைகளை தனி ஒரு கலாசாரக் குழுவாக அடையாளப் படுத்திக் கொள்கின்ற தமிழர்க்கு அரணான திராவிடத்தை ஒழிக்க நினைக்கும் ஹிந்துத்வாக்களுக்கும் , தமிழ் நாடு அரசியலில் ஒரு முக்கிய இடத்தை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்று என்னும் கோங்க்றேச்சிருக்கும் சீமான் மறை முகமாக தனக்கு  தெரியாமலேயே உதவி செய்து கொண்டிருக்கிறார்!!!
இப்போது தான் 29  இடங்களை வென்றிருக்கிறோம்.. நமக்கும் திராவிடக் கொள்கைக்கும் துள்ளியும் சமந்தமில்லை. இதில் என் வீணாக மூக்கை நுளைப்பானே என்று விஜயகாந்த் இதை பற்றி கேள்விப் படாததுப் போல் நடந்து கொள்வார்..

திராவிடம் வீழும் தினம் தமிழனும் வீழ்வான் ..

மறுபடியும் அடிமையாவான்..

உரிமை இழப்பான்..

நுகர்வுக்க் கலாச்சாரத்தில் நசுங்கிச் சாவான்..  

Thursday, 14 April 2011

அட மானங்கெட்ட தமிழா !!!!

சித்திரை ஒன்னு..

பள்ளி காலத்தில்.. தமிழ் புத்தாண்டாக கொண்டாடியிருக்கிறேன்..

அவியல், பாயாசம்  என்று வீடே அன்று கமகமக்கும் ..

முறுக்கு, அதிரசம் என்று அம்மா சுட்ட பலகாரங்களை பக்கத்துக்கு வீட்டுக்கு தட்டில்  கொண்டு போய் குடுப்பேன்..

அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்களும் அவர்கள் வீட்டுப் பலகாரங்களை எங்களுக்கு கொண்டு வந்து தருவார்கள்..

வருடத்தில் வரும் எல்லா பண்டிகைகளுக்குமே இது அநேகமாக நடக்கும்.. இனி வரும் காலங்களில் இது நடக்குமா என்று கேட்டால் எனக்கு என்னமோ நடக்காது என்று தான் தோன்றுகிறது.. பிளாட்டை வாங்கிப் போட்டுவிட்டு அதை லாட்ஜ் மாதிரி பயன் படுத்திக் கொண்டிருக்கும், வாழ்கையை வாழாத சாப்ட்வேர் இஞ்ச்நீர்களிடம் இதை எதிர் பார்ப்பதும் முட்டாள் தனம் ..

சரி அவிங்கள திட்ட ஆரம்பிச்சா நாள் பூரா திட்டலாம்.. அதா அப்புறம் பாப்போம் ..

மேட்டர்க்கு வருவோம் ..

அப்புறம் இந்த கேபிள் டிவி வந்த பிறகு எல்லா பண்டிகைகளுக்கும் சிறப்பு மங்கள இசை , சிறப்பு வணக்கம் தமிழகம் ,  சிறப்பு நகைச்சுவை பட்டி  மன்றம் ,  அந்த நடிகையோட சிறப்பு பேட்டி, இந்த பண்டிகைக்கு வெளியாகும் படங்களின் ஒரு சிறப்பு பார்வை, அப்புறம் "இந்திய தொலைகாட்சிகளின் வரலாற்றிலயே முதல் முறையாக"னு எதாவது படம்.. இப்படி டிவி முண்ணாடி உட்காந்தே நாள் போய்டும்..

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வரலாற்றை படிக்கப் படிக்கத் தான் .. இந்த சித்திரை ஒன்னுன்றது நம்ம புத்தாண்டே இல்லன்னு தெரிஞ்சுச்சு..

விவசாயத்தை ஆதாரமாக கொண்டு வாழ்ந்த தமிழர்கள் தை ஒன்றைத் தான் பண்டை காலம் தொட்டே தமிழ் வருடப்ப் பிரபாக கொண்டாடி வந்திருகின்றனர் ..

வள்ளுவர்  கூட தொழில்களில் உழவை தான் முதன்மைத் தொழிலாக கொண்டார்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்


என்று அவர் கூறியதை மறக்கலாகாது ..

இப்படி உழவுத் தொழிலை மையமாக கொண்டு வாழ்ந்த தமிழன் என்று இந்த சித்திரை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தான்??

சரி அதற்க்கு முன் இந்த சித்திரை ஒன்றை மையமாக கொண்ட அறுபது ஆண்டு கணக்கின் வரலாற்றுப் பின்னணி தான் என்ன??

வரலாறாவது மண்ணாவது .. ஆரியன் என்னைகையா வரலாற பத்தி கவலை பட்டுருக்கான் .. அவன் என்னைக்குமே புராணப் புரட்டயல்லவா நம்பி இருக்கிறான்.. கதை இதோ..

எந்நேரமும் மேலோகத்தில் குழப்பத்தை விழைவித்து எல்லாம் நன்மைக்கே என்று அந்தர் பல்டி அடிக்கும் நாரதர்க்கு அன்று ஒரு வினோத ஆசை .. இப்படி பெருமாள் மீது இத்தனை அன்பு வைத்திருக்கிறோமே .. அவர் நாமத்தையே என்றும் ஜெபித்துக் கொண்டிருக்கிறோமே .. அவருடன் கலவி செய்தால்  எப்படி இருக்கும் என்று ..

தயக்கம் ஏன்!! உடனே சென்றார் பெருமாளிடம் ..

தன் ஆசையையும் கூறினார் .. கலவிக்கு என்றுமே பச்சைக் கொடி காட்டும் இந்து தெய்வங்கள் எதை எண்ணித் தான் தயங்கினார்கள் ..

உடனே பெருமாளும் இசைந்தார் .. நாரதர் பெண் வடிவம் கொண்டார்.. இருவரும் கூடினர்..

அவர்கள் கூடி பெற்றக் குழந்தைகள் அறுபது பேர்.. பிரபவ தொடங்கி அட்ச்சய வரை.. அதில் ஒரு பெயர் கூட தமிழ் பெயர் கிடையாது என்பதை காண்க !!!

இந்த அறுபது பெயர்களும் அறுபது ஆண்டுகளின் பெயர்களாக ஆகின.. இந்த அறுபது ஆண்டுகளும் சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கும்..
ஆரியர் எப்படி நான்கு யுகங்களும் சுழற்சி முறையில் வருமோ அதே போல் அறுபது ஆண்டுகளும் சுழற்சி முறையில் வரும் என்று கூறினார்கள் என்பதை மனதில் கொள்க!!! இப்படி சுழற்சி முறையில் ஆண்டுகளை குறிக்க உள்ள நோக்கம் தான் என்ன என்று சில எண்ணலாம்..

"Time As A Metaphor Of History " என்ற தலைப்பில் ரொமிலா  தப்பார் என்ற சரித்திர ஆய்வாளர் ஆற்றிய உரையில் இந்த சுழற்சி யுக முறை என்ன  சமூதாயத்தில்  பாதிப்பை கொண்டு வந்தது என்று தெளிவாக கூறுகிறார்..

 சுழற்சி யுக முறையை கொண்டுள்ள காரணத்தால் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத மனநிலை மக்களிடத்தில் தோன்றுகிறது.. சத்ய யுகத்தில் ஆரம்பித்து உலகில் சத்யம் குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் முற்றிலுமாக அழிந்தது கல்கி என்ற அவதாரம் தோன்றி அநீதியை அழித்த பிறகு சத்ய யுகம் மறுபடியும் தோன்றும்.. இது தான் ஆரியர்  கட்டி விடும் கதை..

 எடுத்துக் காட்டாக கலியுகத்தில் உள்ள ஒருவனிடம் இந்த அநீதியை எதிர்த்து  ஏதாவது செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான்? கலியுகத்தில் இப்படி தான் இருக்கும்.. இறைவன் வந்து தான் எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும் என்று கூறுவான் .. மேலும் சத்ய யுகம் பிறந்தாலும் மீண்டும் கலியுகதிக்கு தான் கொண்டு வந்து விடும் பல ஆண்டுகள் கழித்து.. இது மூலம் முன்னேற்றம்  என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போகிறது .. மக்களும் எந்த ஒரு மாற்றத்திற்காகவும் பாடு படாமல் எல்லாம் தன்னால் நடக்கும் என்ற மனநிலைக்குத்  தள்ளப் படுகிறார்கள்..

இதனால் யாருக்கு லாபம்? ஆர்யத்தின் சூத்திரதாரியான பார்பனுக்கு தான்!!!.. உழைக்காமல் உண்ணும் அவனை எவனும் கேள்வி கேட்கப் போவதில்லையே மாற்றத்தின்  மீது நம்பிக்கை வைக்காத மக்கள்..

எவ்வளவு பெரிய ஆரிய சூழ்ச்சி!!!

இந்த கேவலமான புராணக்  கதையையும்  (புராணக் கதையில் எந்தக் கதை கேவலமாக இல்லை? என்று நீங்க கேக்கலாம் .. அதுவும் சரிதான் .. ) அந்த ஆண்டு முறையையும் தமிழர்கள் மத்தியில் புகுத்தியது ஆரியம்.. சாலிவாகனன்  என்ற அரசனால் தான் கி.பிக்களில் புகுத்தப் பட்டது என்று வரலாறு கூறுகிறது ..

இந்தக் அசிங்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்று பெரியார் , மறைமலை அடிகளார் போன்றோர் முயற்சி எடுத்தனர் ..

திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவதே தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழி வகுக்கும்.. தை ஒன்றை தமிழர் புத்தாண்டாக சுய மரியாதையுடன் கொண்டாடுவோம்.. கலைஞர் தமிழ்ப் புத்தாண்டு தை ஒன்று தான் என்று அறிவித்தப் பிறகும் .. "கலைஞர் சொன்னா.. மாறிடுமா.. நான் சித்திரை ஒன்னை தான் கொண்டாடுவேன்" என்று பிடிவாதம் பிடிகின்றனர் தமிழர்களில் சிலர் ; கலைஞர் மேல் உள்ள கோவம் உண்மையை புறம் தள்ளுகிறது..

அம்மையார் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாராம்   .. அவர் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றக் கூடும் .. அனால் உண்மையை அறிந்து பகுத்தறிவுடன் செயல் படுங்கள் தோழர்களே..

உண்மையை கூறி தோழர்களை தெளிவு பெறச்செயுங்கள்!!!
தமிழர் புத்தாண்டு தை ஒன்றே என்று உரக்கச் சொல்லுவோம்  ..!!
ஆரிய மாயையிலிருந்து விடு படுவோம் !!!
Saturday, 9 April 2011

அண்ணா ஹசாரே - நாடகம் தான் நடக்குதய்யா !!!!!!
அண்ணா ஹசாரே.. உலகக் கோப்பை வென்ற செய்தியையே தேய்ந்த ரெக்கார்ட் போல திருப்பி திருப்பி போட்டுக் கொண்டே இருந்த  நியூஸ் சேனல்களுக்கும் அதை பார்த்து அலுத்துப் போன நாட்டு மக்களுக்கும் நாலு நாட்களாக செய்தி தீனி போட்டுக் கொண்டிருப்பவர் ..

"லோக் பால்" என்னும் லஞ்ச ஒழிப்பை மையப் படுத்தும் சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என்றும்  அந்த காரிய கமிட்டியில் அரசில் அல்லாத மக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு உண்ணா விரதத்தை துடங்கினார் ஏப்ரல் 5 2011  அன்று..அது வரை இவரை பற்றி அனேக பேருக்கு தெரிந்திருக்காது.. என்னையும் உட்பட .. லோக் பல் சட்டத்தை பற்றியும் பல பேரு கேள்விப் பட்டிருப்பார்களா  என்பதும் சந்தேகமே..

அனால் கடந்த நான்கு நாட்கள் அவருக்கு நாடெங்கும் , தமிழகம் உட்பட ஆதரவு பெருகியது பெருவியப்பை அளித்தது.. எங்கும் நியூஸ் சேனல்கள் மக்களின் குரலை கேட்க சுறுசுறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தது..

தமிழகத்தில் கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இரண்டு நகரங்களிலும் அண்ணா ஹசாறேவிர்க்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெரிய கூட்டம் கூட்டப்பட்டது ..

பேஸ்பூக் நண்பர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.. எந்த ஒரு போரட்டத்திற்கும் ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போட்டால் தன் கடமை முடிந்தது என்று நினைக்கும் கூட்டம் தன் கடமையை(!!!) நிறைவேற்றியது..

ஈழத்தில் நம் சொந்தங்கள் இனப்படுகொலை செய்யப் பட்ட போது.. தமிழக மீனவர்களை சிங்கள இனவெறியன் வேட்டையாடிய போது .. தீண்டாமை கொடுமையை நாடெங்கும் உரக்க சொல்லிய போது .. முஸ்லிம் தோழர்களை ஆர்.எஸ்.எஸ் பாபர் மசூதியும் போதும் குஜராத் கலவரத்தின் போதும் கொன்று குவித்த போது .. ஆதிவாசிகளை "நாட்டின் பேராபத்து" என்று பிரகடனம் செய்து அவர்களை அவர்கள் நிலத்தை விட்டு ராணுவம் கொண்டு அகற்றிய போது.. காஷ்மீர் , மணிப்பூர் முதலிய மாகாணங்களில் இந்திய ராணுவம் இறையாண்மைக்கு  அப்பாவிகளை இரையாக்கிய போது வராத மக்கள் கூட்டம் இந்த எழுவது வயது முதியவரின் உண்ணா நிலை போராட்டத்திற்கு கூடியது எனக்கு பெரும் வியப்பை அளித்தது..மேற் கூறிய எந்த பிரச்சனைக்கும் செவி சாய்க்காத மெட்ரோ சிட்டிகளில் வாழும் நடுத்தர  வர்க்கம் தான் இந்த போராட்டத்திற்கு கடலென திரண்டனர் .. "சமுதாயத்தில் வேறு எந்த பிரச்னையுமே இல்லை.. இந்த லஞ்சத்தை மட்டும் ஒழித்தோமேயானால் நாடு வல்லரசாகும்" என்று நினைக்கும் நடுத்தர வர்க்க கூடத்தின் மனோபாவம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வருகிறது .. அவர்களுக்கு இந்த ஒரு போராட்டம் பெரும் மன நிம்மதியை  கொடுத்திருக்கும்.. "நம்மை  சமூக அக்கறை இல்லாதவர்கள்" என்று கூறினார்களே.. பார்தீர்கள நாம் எவ்வளவு பெரிய சாதனையை படித்திருக்கிறோம் என்றும், புரட்சியை செய்து காட்டிறுக்கிறோம் என்ற அக மகிழ்ச்சியுடன் உலவுவார்கள்.

மாதம் ஒரு முறை கையில் தேசியக் கொடியும் , அதை ஆட்டுவதற்கு ஒரு இடம்மும் கொடுத்தால் எந்த ஒரு உரிமைப் போராட்டத்தையும் தேசத்திற்கான பேராபத்து என்று பின்னுக்கு தள்ளிவிடலாம் என்ற ஆளும் வர்கத்தின் கொள்கைக்கு  இது ஒரு மகத்தான வெற்றி..

எந்த ஒரு நிகழ்விற்கும் தர்க நியாயங்களை நாடாமல் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து மக்களை மூளைச் சலவை செய்யும் செய்தி ஊடகங்கள் இந்த முறையும் அதையே செய்தன.."நாட்டில் பெருழ்ச்சி உண்டாகி  விட்டது" என்று கூறின.. மெட்ரோ நகரங்களில் அன்று மெழுகுவருத்தி  ஏத்தி வைத்த கூட்டம் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கும் என்று நீங்கள் நினைகிறீர்கள் ?? இதனை எப்படி பெருழ்ச்சி என்று கூற முடியும்.. இதையெல்லாம் சிந்திக்கும் நிலைமையில் மக்கள் இல்லை!!!

முதலில் நான் செய்திகளில் பார்த்த அண்ணா ஹசாரே அமர்ந்திருந்த மேடையே எனக்கு குழப்பத்தை உண்டாகியது

பாரத மாதா,

அவள் காலடியில் பகத் சிங்க், சுக்தேவ், ராஜகுரு,

இவர்கள் என்ன அகிம்சை போரில் ஈடு பட்டவர்களா????

அல்ல அகிம்சை போராட்டத்தை தான் ஆதரிதவர்களா??

அல்ல பாரத மாதாவிற்கு  தான் உளைத்தவர்களா ??

ஆங்கிலேயன் மட்டும் அல்ல.. உழைக்கும் வர்கத்திற்க்கு இந்திய முதலாளியும் எதிரியே .. அவனையும் எதிர்த்து தான் போராட வேண்டும் என்ற மார்சிய சிந்தனையோடு போராடிய பகத் சிங்கை அவரின் கொள்கையிலிருந்து பிரித்தெடுத்து இளைங்கர்களை ஏமாற்ற ஹிந்துத்வா இயக்கம் செய்யும் வேலையே தான் இவரும் செய்திருக்கிறார் என்று நான் கூறுவேன் ..

கூட்டத்தில்  தேசிய கொடிகளும் , "ரகு பதி ராஜாவா ராஜாராம்" பாடலும் பலரால் படப் பட்டது ..

ஐரோம் ஷர்மிளாவின் அஹிம்சை போராட்டத்தை பற்றி கவலை படாத, அல்லது அதை அறிந்து கூட இராத  ஒரு கூட்டம் வெள்ளை உடை அணிந்து கை தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தது..

இதற்க்கு இடையில் நான் வலையில் உலவும் போது அண்ணா ஹசாறேவின் இந்த போராட்டத்தை பற்றிய ஒரு அழகான ஆழமான பதிவு படிக்க நேர்ந்தது .. இதனை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு என்றே நான் கருதிகிறேன் ..

அந்தப் பதிவில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நான் கருதுவதை மட்டும் தமிழாக்கம் செய்கிறேன் ..

" "ஜன லோக் பல்" சட்டம்  இந்தியா இது வரை கண்டிராத ஒரு பலமிக்க நிறுவனமாக "லோக் பல் " இயக்கத்தை நிர்ணயிக்க முயல்கிறது .. சட்டத்தை இயற்றவும் , சட்டத்தை நடைமுறை படுத்தவும் , ஒருவரை தண்டிக்கவும் அதிகாரத்தை கொண்டுள்ள இயக்கமாக இது இருக்கும் .. இந்த லோக்பால் அமைபிற்கு நியமனம் செய்யும் உரிமை யார் யாருக்கு இருக்கிறது .. பாரத ரத்னா விருது பெற்றவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபெல் பரிசு பெற்றவர்கள் , சுப்ரீம் கோர்ட்டை சேர்ந்த மூத்த நீதிபதிகள், தேர்தல் ஆணையர் ,  லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் சபாநாயகர்கள்.. இதில் லோக் சபா சபாநாயகரை தவிர வேறு யாரும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் அல்ல. இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருப்பவர்களும் அல்ல ..

ஒரு சமூகத்தை ஆட்டி படைக்கும் சக்தியை சமூகத்தில் உயர்நிலையில் இருபவர்களிடம் கொடுக்கும் செய்யலில்லாமல் இது வேறு என்ன?? இந்த ஜன லோக் அமைப்பு செயல்பாட்டிற்கு வருமேயானால் அது இந்தியா சனநாயகர்திக்கு கேடாகவே முடியும்!! எந்த ஒரு பாசிச இயக்கமும் சமூதாயத்தை அதன் கேடுகளில் இருத்து விடுவிப்பதற்கான போர் முரசை கொட்டிய தொடங்கும்.. அதற்க்கு உணர்ச்சியால் மட்டும் ஒன்று படும் மக்கள் கூட்டமும் பின்னால் இருக்கும் " என்று அதை எழுதிய சுத்தப்ரத சென்குப்தா கூறுகிறார்..

ஸ்பெக்ட்ரம்  ஊழல் , காமன் வெல்த் ஊழல் என்று பல தவறுகளை செய்த காங்கிரஸ் அரசு இவரின் போராட்டத்திற்கு செவி சாய்ப்பதன்  மூலம் மக்களின் நம்பிகையை பெறும் என்று நான் கருதிகிறேன்.. "இதோ உங்களின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது.. இங்கு நடப்பது மக்களாட்சி தான் .. பெரும் முதலாளிகள் இயக்கும் ஒரு சுரண்டல் ஆரசு அல்ல" என்று காங்கிரஸ் மட்டும் அல்ல இந்திய தேர்தல் கட்சிகள் அனைத்தும் புன் முறுவலுடன் மக்கள் முன் வந்து நிற்பர். ஒரு வேளை இதனால் தான் இந்த போராட்ட நாடகம் அரங்கேருவதர்க்கே  மத்திய சர்கார் அனுமதித்ததோ என்ற சந்தேகம் எழுகிறது!!! அருந்ததி ராயையும் பினாயக் சேனையும் தூற்றிய இந்த ஊடங்கள் இந்த உண்ணாவிரதத்தை முழு நேரமாக ஒழி பரப்பியது இந்தர்க்காகத்தானோ?? 


அண்ணா ஹசாரே -- இன்னும் சில காலம், அந்த சட்டம் நிறைவேற்றப்படும் வரை கலி போக்க வந்த கல்க்கியாகவே மக்களுக்கு இவர் காட்சியளிப்பார்

அண்ணா ஹசாரே -- இந்தியாவில் எல்லா உரிமை பிரச்சனைகளையும் மறக்கடிக்க ஊடகங்களுக்கு இவர் இன்னும் சில காலம் பயன் படுவார்

அண்ணா ஹசாரே -- இனி வரும் காலங்களில் வேறு வடிவம் பெரும் சமூக போராட்டங்களை நீர்த்து போக செய்ய இவரின் பெயர் இந்திய அரசுக்கு பயன் படும் ..

Wednesday, 6 April 2011

அய்யய்யய்யய்யய்யய்யய்யய்யய்யய்


Proud to be Indian

We won

Its ours

We are the champions

hooooooo.. i am flying in the air..

Go India Goooooooooooooooo...

Chak de India..

Proudest moment of my life..

ஒரு நாலு நாளா எங்க பாத்தாலும் இத தான்ணே எழுதி வைச்சுருக்காயிங்க ..

ஒரு கிரிக்கெட் மேட்ச் ஜெய்ச்சதுகாடா  இந்த அக்கப் போரு..

ஒரு கோடி ரூபாயும் பதக்கமும் அவனுக்கு தான் குடுத்துருக்காயிங்க 

மம்தா பானர்ஜி அம்மா டிரைன் டிக்கெட் வேற ப்ரீய குடுக்குறேன்னு அறிவிசுடுச்சு ..

இப்போ கிங் பிஷேர் ப்ளைட்ல ப்ரீ டிக்கெட்டாம் அம்புட்டு பயலுக்கும்..

இன்னும் என்னன்ன ப்ரீயா குடுக்க போராயிங்கன்னு தெரியல ..

ஆபீஸ் குள்ள போனா மேனேஜர் வந்து "கன்க்ராட்ஸ் வி வான் தி வேர்ல்ட் கப்" னு ஸ்வீட் குடுக்குறாரு

ஏற்கனவே பெரிய ஸ்க்ரீன்ல பீர் வங்கி வைச்சு மேட்ச் பத்தாயிங்க இந்திய பாகிஸ்தான் விளையாண்டப்போ..

"டேய் ஒரு வேர்ல்ட் கப்க்கு ஏன் இப்படி அலட்டுராயிங்க"னு சொனதுக்கு "உனக்கு தேசப்பற்றே இல்ல.. உன்ன எல்லாம் நாடு கடத்துனா கூட தப்பு இல்லடா" னு  சொல்லிதான் என் நண்பன்..

வார இறுதில அலுமினி மீட் ஸ்கூல்லன்னு  ஆர்வமா டிக்கெட் எல்லாம் எடுத்து வைசுருந்தேன்.. "we being patriotic indians postpone the alumi meet as we have got the world cup final match on saturday" னு மெயில் அனுப்புராயிங்க .. 

உங்க தேச பக்தி புல் அறிக்க வைக்குது பாஸ்..

ஏதோ  படிக்காதவன் தான் கிவாடர்க்கு ஆசை பட்டு நாட்டை அடகு வைச்ச மாறி பேசுற படிச்சவனுங்களா.. அவனுக்கு கிவடரும் கோழி ப்ரியாநியும்னா உங்களுக்கு கிரிக்கெட்டும் கபே டேயும்.. என்னத்த பெரிய வித்யாசம்..

பயம்  ஒண்ணு  தான்.. அடுத்த உலக கோப்பை ஜெய்ச்சா இந்தியா வல்லரசு ஆய்டுச்சுன்னு சொல்லிருவாயிங்களோன்னு  தான் கொஞ்சம் திக்கு திக்குன்னு இருக்கு