Saturday 9 April 2011

அண்ணா ஹசாரே - நாடகம் தான் நடக்குதய்யா !!!!!!




அண்ணா ஹசாரே.. உலகக் கோப்பை வென்ற செய்தியையே தேய்ந்த ரெக்கார்ட் போல திருப்பி திருப்பி போட்டுக் கொண்டே இருந்த  நியூஸ் சேனல்களுக்கும் அதை பார்த்து அலுத்துப் போன நாட்டு மக்களுக்கும் நாலு நாட்களாக செய்தி தீனி போட்டுக் கொண்டிருப்பவர் ..

"லோக் பால்" என்னும் லஞ்ச ஒழிப்பை மையப் படுத்தும் சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என்றும்  அந்த காரிய கமிட்டியில் அரசில் அல்லாத மக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு உண்ணா விரதத்தை துடங்கினார் ஏப்ரல் 5 2011  அன்று..



அது வரை இவரை பற்றி அனேக பேருக்கு தெரிந்திருக்காது.. என்னையும் உட்பட .. லோக் பல் சட்டத்தை பற்றியும் பல பேரு கேள்விப் பட்டிருப்பார்களா  என்பதும் சந்தேகமே..

அனால் கடந்த நான்கு நாட்கள் அவருக்கு நாடெங்கும் , தமிழகம் உட்பட ஆதரவு பெருகியது பெருவியப்பை அளித்தது.. எங்கும் நியூஸ் சேனல்கள் மக்களின் குரலை கேட்க சுறுசுறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தது..

தமிழகத்தில் கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இரண்டு நகரங்களிலும் அண்ணா ஹசாறேவிர்க்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெரிய கூட்டம் கூட்டப்பட்டது ..

பேஸ்பூக் நண்பர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.. எந்த ஒரு போரட்டத்திற்கும் ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போட்டால் தன் கடமை முடிந்தது என்று நினைக்கும் கூட்டம் தன் கடமையை(!!!) நிறைவேற்றியது..

ஈழத்தில் நம் சொந்தங்கள் இனப்படுகொலை செய்யப் பட்ட போது.. தமிழக மீனவர்களை சிங்கள இனவெறியன் வேட்டையாடிய போது .. தீண்டாமை கொடுமையை நாடெங்கும் உரக்க சொல்லிய போது .. முஸ்லிம் தோழர்களை ஆர்.எஸ்.எஸ் பாபர் மசூதியும் போதும் குஜராத் கலவரத்தின் போதும் கொன்று குவித்த போது .. ஆதிவாசிகளை "நாட்டின் பேராபத்து" என்று பிரகடனம் செய்து அவர்களை அவர்கள் நிலத்தை விட்டு ராணுவம் கொண்டு அகற்றிய போது.. காஷ்மீர் , மணிப்பூர் முதலிய மாகாணங்களில் இந்திய ராணுவம் இறையாண்மைக்கு  அப்பாவிகளை இரையாக்கிய போது வராத மக்கள் கூட்டம் இந்த எழுவது வயது முதியவரின் உண்ணா நிலை போராட்டத்திற்கு கூடியது எனக்கு பெரும் வியப்பை அளித்தது..



மேற் கூறிய எந்த பிரச்சனைக்கும் செவி சாய்க்காத மெட்ரோ சிட்டிகளில் வாழும் நடுத்தர  வர்க்கம் தான் இந்த போராட்டத்திற்கு கடலென திரண்டனர் .. "சமுதாயத்தில் வேறு எந்த பிரச்னையுமே இல்லை.. இந்த லஞ்சத்தை மட்டும் ஒழித்தோமேயானால் நாடு வல்லரசாகும்" என்று நினைக்கும் நடுத்தர வர்க்க கூடத்தின் மனோபாவம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வருகிறது .. அவர்களுக்கு இந்த ஒரு போராட்டம் பெரும் மன நிம்மதியை  கொடுத்திருக்கும்.. "நம்மை  சமூக அக்கறை இல்லாதவர்கள்" என்று கூறினார்களே.. பார்தீர்கள நாம் எவ்வளவு பெரிய சாதனையை படித்திருக்கிறோம் என்றும், புரட்சியை செய்து காட்டிறுக்கிறோம் என்ற அக மகிழ்ச்சியுடன் உலவுவார்கள்.

மாதம் ஒரு முறை கையில் தேசியக் கொடியும் , அதை ஆட்டுவதற்கு ஒரு இடம்மும் கொடுத்தால் எந்த ஒரு உரிமைப் போராட்டத்தையும் தேசத்திற்கான பேராபத்து என்று பின்னுக்கு தள்ளிவிடலாம் என்ற ஆளும் வர்கத்தின் கொள்கைக்கு  இது ஒரு மகத்தான வெற்றி..

எந்த ஒரு நிகழ்விற்கும் தர்க நியாயங்களை நாடாமல் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து மக்களை மூளைச் சலவை செய்யும் செய்தி ஊடகங்கள் இந்த முறையும் அதையே செய்தன.."நாட்டில் பெருழ்ச்சி உண்டாகி  விட்டது" என்று கூறின.. மெட்ரோ நகரங்களில் அன்று மெழுகுவருத்தி  ஏத்தி வைத்த கூட்டம் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கும் என்று நீங்கள் நினைகிறீர்கள் ?? இதனை எப்படி பெருழ்ச்சி என்று கூற முடியும்.. இதையெல்லாம் சிந்திக்கும் நிலைமையில் மக்கள் இல்லை!!!

முதலில் நான் செய்திகளில் பார்த்த அண்ணா ஹசாரே அமர்ந்திருந்த மேடையே எனக்கு குழப்பத்தை உண்டாகியது

பாரத மாதா,

அவள் காலடியில் பகத் சிங்க், சுக்தேவ், ராஜகுரு,

இவர்கள் என்ன அகிம்சை போரில் ஈடு பட்டவர்களா????

அல்ல அகிம்சை போராட்டத்தை தான் ஆதரிதவர்களா??

அல்ல பாரத மாதாவிற்கு  தான் உளைத்தவர்களா ??

ஆங்கிலேயன் மட்டும் அல்ல.. உழைக்கும் வர்கத்திற்க்கு இந்திய முதலாளியும் எதிரியே .. அவனையும் எதிர்த்து தான் போராட வேண்டும் என்ற மார்சிய சிந்தனையோடு போராடிய பகத் சிங்கை அவரின் கொள்கையிலிருந்து பிரித்தெடுத்து இளைங்கர்களை ஏமாற்ற ஹிந்துத்வா இயக்கம் செய்யும் வேலையே தான் இவரும் செய்திருக்கிறார் என்று நான் கூறுவேன் ..

கூட்டத்தில்  தேசிய கொடிகளும் , "ரகு பதி ராஜாவா ராஜாராம்" பாடலும் பலரால் படப் பட்டது ..

ஐரோம் ஷர்மிளாவின் அஹிம்சை போராட்டத்தை பற்றி கவலை படாத, அல்லது அதை அறிந்து கூட இராத  ஒரு கூட்டம் வெள்ளை உடை அணிந்து கை தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தது..

இதற்க்கு இடையில் நான் வலையில் உலவும் போது அண்ணா ஹசாறேவின் இந்த போராட்டத்தை பற்றிய ஒரு அழகான ஆழமான பதிவு படிக்க நேர்ந்தது .. இதனை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு என்றே நான் கருதிகிறேன் ..

அந்தப் பதிவில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நான் கருதுவதை மட்டும் தமிழாக்கம் செய்கிறேன் ..

" "ஜன லோக் பல்" சட்டம்  இந்தியா இது வரை கண்டிராத ஒரு பலமிக்க நிறுவனமாக "லோக் பல் " இயக்கத்தை நிர்ணயிக்க முயல்கிறது .. சட்டத்தை இயற்றவும் , சட்டத்தை நடைமுறை படுத்தவும் , ஒருவரை தண்டிக்கவும் அதிகாரத்தை கொண்டுள்ள இயக்கமாக இது இருக்கும் .. இந்த லோக்பால் அமைபிற்கு நியமனம் செய்யும் உரிமை யார் யாருக்கு இருக்கிறது .. பாரத ரத்னா விருது பெற்றவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபெல் பரிசு பெற்றவர்கள் , சுப்ரீம் கோர்ட்டை சேர்ந்த மூத்த நீதிபதிகள், தேர்தல் ஆணையர் ,  லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் சபாநாயகர்கள்.. இதில் லோக் சபா சபாநாயகரை தவிர வேறு யாரும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் அல்ல. இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருப்பவர்களும் அல்ல ..

ஒரு சமூகத்தை ஆட்டி படைக்கும் சக்தியை சமூகத்தில் உயர்நிலையில் இருபவர்களிடம் கொடுக்கும் செய்யலில்லாமல் இது வேறு என்ன?? இந்த ஜன லோக் அமைப்பு செயல்பாட்டிற்கு வருமேயானால் அது இந்தியா சனநாயகர்திக்கு கேடாகவே முடியும்!! எந்த ஒரு பாசிச இயக்கமும் சமூதாயத்தை அதன் கேடுகளில் இருத்து விடுவிப்பதற்கான போர் முரசை கொட்டிய தொடங்கும்.. அதற்க்கு உணர்ச்சியால் மட்டும் ஒன்று படும் மக்கள் கூட்டமும் பின்னால் இருக்கும் " என்று அதை எழுதிய சுத்தப்ரத சென்குப்தா கூறுகிறார்..

ஸ்பெக்ட்ரம்  ஊழல் , காமன் வெல்த் ஊழல் என்று பல தவறுகளை செய்த காங்கிரஸ் அரசு இவரின் போராட்டத்திற்கு செவி சாய்ப்பதன்  மூலம் மக்களின் நம்பிகையை பெறும் என்று நான் கருதிகிறேன்.. "இதோ உங்களின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது.. இங்கு நடப்பது மக்களாட்சி தான் .. பெரும் முதலாளிகள் இயக்கும் ஒரு சுரண்டல் ஆரசு அல்ல" என்று காங்கிரஸ் மட்டும் அல்ல இந்திய தேர்தல் கட்சிகள் அனைத்தும் புன் முறுவலுடன் மக்கள் முன் வந்து நிற்பர். ஒரு வேளை இதனால் தான் இந்த போராட்ட நாடகம் அரங்கேருவதர்க்கே  மத்திய சர்கார் அனுமதித்ததோ என்ற சந்தேகம் எழுகிறது!!! அருந்ததி ராயையும் பினாயக் சேனையும் தூற்றிய இந்த ஊடங்கள் இந்த உண்ணாவிரதத்தை முழு நேரமாக ஒழி பரப்பியது இந்தர்க்காகத்தானோ?? 


அண்ணா ஹசாரே -- இன்னும் சில காலம், அந்த சட்டம் நிறைவேற்றப்படும் வரை கலி போக்க வந்த கல்க்கியாகவே மக்களுக்கு இவர் காட்சியளிப்பார்

அண்ணா ஹசாரே -- இந்தியாவில் எல்லா உரிமை பிரச்சனைகளையும் மறக்கடிக்க ஊடகங்களுக்கு இவர் இன்னும் சில காலம் பயன் படுவார்

அண்ணா ஹசாரே -- இனி வரும் காலங்களில் வேறு வடிவம் பெரும் சமூக போராட்டங்களை நீர்த்து போக செய்ய இவரின் பெயர் இந்திய அரசுக்கு பயன் படும் ..

8 comments:

Thekkikattan|தெகா said...

டார்ச் அடிச்சு பார்த்த பதிவு -ஓநாயே வேலி காத்த கதைதான்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஊடகம் , ஆளுங்கட்சி ஆதரவு கொடுத்தாலே சந்தேகம் வரணுமே..

கவனமா டாடா, அம்பானியை காப்பாத்திட்டாங்க..

விளக்கமான மறுபக்க பார்வை..பலரை சென்றடையணும்..

மக்கள் கொஞ்சம் யோசிக்கணும்..

என் பதிவு இங்கே..

http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_09.html

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?

அக்னி பார்வை said...

நல்ல பதிவு தொடருங்கள்..

kumar said...

சரியாக எழுதியிருக்கிறீர்கள் சகோ.இந்த மேட்டரை புடிச்சுக்கிட்டு பதிவுல கைப்புள்ளங்க பண்ற அக்கிரமம்
தாங்க முடியல.வினவில் வந்த கட்டுரையை படித்து விட்டீர்களா?

அருண் said...

@ அனைவருக்கும் - ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி !!!

இன்னைக்கு தான் படிச்சேன் பஷீர்..

superlinks said...

வணக்கம்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

srithartamilan said...

vanakkam thozhar,

nalla pathivu...

why we not support the people fighting for own land occupied by company/kacha theevu-indian island given by Pm Indira gandhi and indian Indian foreign secretariat kedhal singh to srilanka.Is not a corruption? Fasting and lighting the candle is the way to stop corruption. pl reply

vizhithezhu iyakkam
Mumbai
vizhiothezhuiyakkam.blogspot.com

அருண் said...

கண்டிப்பாக இந்த மெளுகுவருத்தி ஊர்வலமும், உண்ணா விரதமும் நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர போவதில்லை தோழர்.. எந்த ஒரு உரிமை சார்ந்த போராட்டத்திற்கும் இந்த அரசு செவி சாய்க்காது எளிதில்.. மீடியாக்கள் இப்படி ஒரு போராட்டம் நிகழ்ந்ததாகக் கூட காட்டாது ..